அமெரிக்காவில் தொடர் வட்டி அதிகரிப்பதால் உலகளாவிய வீழ்ச்சி
2022-11-03 15:32:31

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 75 அடிப்படை புள்ளி விகித உயர்வை நவம்பர் 3ஆம் நாள் அறிவித்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 பொருளியலாளர்களிடையில் இது குறித்து சீன ஊடகக் குழுமமும் சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகமும் கூட்டாக நடத்திய கணக்கெடுப்பில், வட்டியை அமெரிக்கா தொடர்ச்சியாக அதிகரிப்பது, உலகளாவிய வீழ்ச்சியைத் தீவிரமாக்கக் கூடும் என்றும் பொருளாதாரத் தேக்க வீக்கத்தின் ஆபத்து அதிகரித்து வருகின்றது என்று அவர்களில் 90 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

வட்டியை அமெரிக்கா தொடர்ச்சியாக அதிகரிப்பது, வளரும் நாடுகளில் கடன் அபாயம் கடுமையாக அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்றும் 94 விழுக்காட்டினர் நம்புகின்றனர்.