சீனாவுக்கும் சிங்கப்பூருக்குமிடையிலான ஒத்துழைப்பு அமைப்பு முறைக்கான கூட்டம்
2022-11-03 15:24:24

சீனத் துணைத் தலைமையமைச்சர் ஹான் ஜெங் சிங்கப்பூரில் நவம்பர் 1ஆம் மற்றும் 2ஆம் நாட்களில் பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூர் அரசுத் தலைவர் ஹாரி மேக் ஜேக்கப்ஸ், தலைமையமைச்சர் லீ ஹ்சியன் லூங், துணைத் தலைமையமைச்சர் வாங் ரூஜி முதலியோருடன் அவர் சந்திப்பு நடத்தினார்.

முதல் நாள், இரு தரப்புகளுக்கிடையிலான ஒத்துழைப்பு அமைப்பு முறை பற்றிய கூட்டத்துக்கு ஹான் ஜெங், வாங் ரூஜி ஆகியோர் கூட்டாகத் தலைமை தாங்கினர். இக்கூட்டத்தில் இரு நாடுகளுக்கிடையிலான பயனுள்ள ஒத்துழைப்பு முன்னேற்றங்கள் பன்முகங்களிலும் தொகுக்கப்பட்டன. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை, பொருளாதார மற்றும் வர்த்தகம், தொடரவல்ல வளர்ச்சி, புத்தாக்கம், நிதி, பொது சுகாதாரம், மனித தொடர்பு பரிமாற்றம் ஆகியவை பற்றி முக்கியமாக விவாதிக்கப்பட்டது. மேலும், அடுத்த கட்ட ஒத்துழைப்புக்கான முன்னுரிமைகள் பற்றியும் இக்கூட்டத்தில் திட்டமிடப்பட்டது.