கிராமப்புறங்களின் புத்துயிரில் மலரும் மூங்கில் கலை
2022-11-03 09:48:56

சீனாவின் ச்சங் து மாநகரின் ச்சொங் ச்சோ நகரில் அமைந்துள்ள டோ மிங் வட்டம், பொருட்சாரா மரபு செல்வமான மூங்கில் பின்னல் கலையால் புகழ் பெற்றது. அதிலுள்ள மூங்கில் கலை ஊர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையை ஈர்த்து வருகிறது.

இந்த அழகான ஊரில் பயணிகள், மூங்கில் கலை பயிலரங்கு மற்றும் பொருட்சாரா மரபு செல்வச் சந்தையில் பார்வையிட்டு, தானாக மூங்கில் பின்னல் பொருட்களைத் தயாரிக்க அனுபவிக்கலாம். 2018ஆம் ஆண்டு இந்த ஊர், ச்சங் து மாநகரின் கிமாரப்புறங்களுக்குப் புத்துயிர் ஊட்டும் 10 முன்மாதிரிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளில் டோ மிங் வட்டத்தின் மூங்கில் கலை ஊர், நீண்டகால மூங்கில் பண்பாட்டை ஒருங்கிணைத்து, விவசாய வேலை அனுபவம், சிறப்பு விடுதி முதலியவை கொண்ட புதிய தொழிலை வளர்த்து, ஊர்வாசிகளுக்கு நலன்களை விளைவித்துள்ளது. தற்போது மூங்கில் கலை ஊர், பொது செல்வம் மற்றும் பசுமை வளர்ச்சி பெறும் பாதையில் நடைபோட்டு வருகிறது.