இந்தியாவின் வேளாண் உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு
2022-11-03 15:38:36

இந்திய மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி,  ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இந்தியாவின் விவசாய மற்றும் தானியப் பதனீட்டுப் பொருட்களின் ஏற்றுமதித் தொகை 1377 கோடி அமெரிக்க டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

2356 கோடி டாலர் என்பது 2022ஆண்டு ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரையான நடப்பு நிதியாண்டின் ஏற்றுமதி இலக்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.