ட்ஸ்ன்க் ஆசியா என்னும் சிந்தனை கிடங்கு கருத்தரங்கு துவக்கம்
2022-11-03 15:44:23

“ட்ஸ்ன்க் ஆசியா”என்னும் சிந்தனை கிடங்கு கருத்தரங்கு நவம்பர் 2ஆம் நாள் சிங்கப்பூரில் நடைபெற்றது. சீனா, இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், கசகஸ்தான் முதலிய ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 40 நிபுணர்களும் அறிஞர்களும், புதிய யுகத்தில் ஆசியாவும் உலகமும் என்ற தலைப்பில் கருத்துகளை ஆழமாகப் பரிமாறிக் கொண்டனர்.

21ஆவது நூற்றாண்டு, ஆசியாவின் நூற்றாண்டு ஆகும். ஆசிய வளர்ச்சியானது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகம் ஆகிய சீனாவின் முன்னெடுப்புகளைச் சார்ந்திருக்கும் என்று இக்கருத்தரங்கில் பங்கெடுத்தவர்கள் தெரிவித்தனர்.