சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் திறந்த மனது!
2022-11-04 21:08:09

நவம்பர் 5 முதல் 10ஆம் நாள் வரை, 5ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி ஷாங்காயில் நடைபெற்று வருகிறது. இது, இறக்குமதியை கருப்பொருளாகக் கொண்ட உலகின் முதலாவது தேசிய நிலைக் கண்காட்சியாகத் திகழ்கிறது. 2018ஆம் ஆண்டு முதன்முறையாக நடத்தப்பட்ட பிறகு, சர்வதேச கொள்முதல், முதலீடு மேம்பாடு, மக்கள் தொடர்பு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றம், திறப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகிய 4 முக்கிய மேடைகளாக சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி மாறியுள்ளது.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 4ஆம் நாள் இதன் துவக்க விழாவில் உரை நிகழ்த்திய போது,

பல்வேறு நாடுகள் மற்றும் தரப்புகளுடன் சீனாவின் பெரிய சந்தை, அமைப்புமுறை ரீதியிலான திறப்பு,  சர்வதேச ஒத்துழைப்பை ஆழமாக்குதல் ஆகிய 3 வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வதைச் சீனா முன்னெடுக்கும் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

திறப்பு, மனிதகுல நாகரிகம் முன்னேற்றம் அடைவதற்கான முக்கிய உந்து சக்தியாகவும், உலகம் செழுமை மற்றும் வளர்ச்சி அடைவதற்கான இன்றியமையாத வழியாகவும் உள்ளது. திறப்புக் கொள்கை மூலமாக,  பொருளாதார உலகமயமாக்கலை முன்னெடுத்து, வளர்ச்சிச் சாதனைகளை மேலதிக அளவிலும் நியாயமான முறையிலும் பல்வேறு நாடுகளின் மக்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

முந்தைய பொருட்காட்சியின் துவக்க விழாவில் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்தியபோது, திறந்த நிலையை விரிவாக்கி, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெற வேண்டும் என முன்மொழிந்தார். குறிப்பாக, இந்த உரைகளில், திறப்பு என்ற சொல் 100க்கும் மேற்பட்ட முறையாக குறிப்பிடப்பட்டது.

இந்த திறப்புக் கொள்கையைக் கடைப்பிடித்துள்ளதால்,  முன்னதாக நடைபெற்ற 4 பொருட்காட்சிகளில், மொத்தம் 1,500 புதிய தயாரிப்புகள், புதிய தொழில்நுட்பம் மற்றும் சேவை உலகளவில் அல்லது சீனாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன. அதில், 27230 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

தற்போது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி  சர்வதேச வர்த்தக அதிகரிப்பு மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான ஆதாரமாக மாறியுள்ளது.