சீனாவில் ‘ஆசிய யானைகள்’ பாதுகாப்பு
2022-11-04 19:09:18

ஆசிய யானை,ஆசியாவில் மிகப் பெரிய தரைவாழ் விலங்காகும்.  கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், அதன் எண்ணிக்கை பாதியளவில் குறைந்து, அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு சீனாவின் வனப்பகுதியில் பணிக்குழு ஒன்று, ஆசிய யானைகளின் இனப்பெருக்கம் மற்றும் மீட்புதவியில் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றது. அவர்கள் ‘யானை அப்பா’ என அன்பாக அழைக்கப்படுகிறனர். சென் ஜீமிங் என்பவர் அவர்களில் ஒருவர். இதுவரை, இப்பணிக்குழு 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகளைக் காப்பாற்றியுள்ளது.

யாங்நியு எனும் ஏழு வயது யானை பிறந்து ஒரு வாரத்திற்குப் பிறகு சொந்த குடும்பத்தினரால் கைவிடப்பட்டது. பலவீனமான மற்றும் உதவியற்ற குட்டியானை காட்டில் உயிர் பிழைக்க முடியாது. அதிர்ஷ்டவசமாக, இப்பணிக்குழு இந்த குட்டி யானையைக் கண்டுபிடித்து பராமரித்து வருகிறது.

மீட்கப்பட்ட யானைகள் இறுதியில் வனப்பகுதிக்குத் திரும்பி அனுப்பப்படுகின்றன. யானை காப்பாளர்களுக்கு ஒரு பொதுவான விருப்பம் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில், சென் ஜிமிங் உள்ளிட்ட யானை காப்பாளர்களின் முயற்சிகளால், சீனாவில் ஆசிய யானைகளின் எண்ணிக்கை சுமார் 300ஆக உயர்ந்துள்ளது.