காலநிலை நிதியுதவி இலக்கை மீண்டும் வலியுறுத்தியது இந்தியா
2022-11-05 20:01:52

காலநிலை நிதியுதவிகாக ஒவ்வோர் ஆண்டும், வளரும் நாடுகளுக்கு 10,000 கோடி அமெரிக்க டாலர் வழங்க வளர்ந்த நாடுகள் உறுதியளித்துள்ளதாக இந்தியா வெள்ளிக்கிழமை மீண்டும் வலியுறுத்தியது.

இம்மாத இறுதியில் எகிப்தில் நடைபெறவுள்ள காலநிலை மாற்றத்துக்கான ஐ.நா. கட்டுக்கோப்பு ஒப்பந்த தரப்புகளின் 27வது மாநாட்டுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஆண்டுக்கு 10,000 கோடி டாலர் காலநிலை நிதியுதவி என்ற இலக்கு "இன்னும் அடையப்படவில்லை" என்று இந்திய மத்திய அரசு கூறியது.  

இந்தியாவின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ், இந்தியக் குழுவிற்க்கு தலைமை தாங்கி இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.