பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தலைவருடன் சிறப்பு நேர்காணல்
2022-11-05 17:30:17

பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி, உலகில் புதிதாக வளரும் முக்கிய நாடுகளின் ஏற்பாடு மற்றும் தலைமையில் உருவாக்கப்பட்ட முதலாவது சர்வதேசப் பலதரப்பு அமைப்பாகும். அத்துடன், உலகின் நிதி மேலாண்மைக்கான புதிய முன்மாதிரியாக இது கருதப்படுகிறது.

“புதிய”என்ற சொல், இவ்வங்கியின் பெயரில் முக்கிய அம்சமாகும். மேலும், இவ்வங்கிக்கான வடிவமைப்பு, நிர்வாகம் மற்றும் மேலாண்மையில், இந்த அம்சம் அதிகமாகக் காணப்படுகின்றது.  

இது குறித்து இவ்வங்கியின் தலைவர் மார்கோஸ் ட்ராய்ஜோ கூறுகையில், முதலில், புதிதாக வளரும் நாடுகளால் நிர்வகிக்கப்படும் முதலாவது அமைப்பு இதுவாகும். இரண்டாவதாக, உள்கட்டமைப்பு கட்டுமானத்தில் புதிய மாற்றம் காணப்படுகிறது. இதில் கட்டிட கட்டுமானம் மட்டும் போதாது. எடுத்துக்காட்டாக, கல்வி துறையின் அடிப்படை கட்டுமானத்தில், கட்டிடங்கள் மட்டுமல்லாமல், இணையம் மூலம் கல்வி வழங்கும் திறமையும் வளர்க்கப்பட வேண்டும். மூன்றாவதாக, புதிய மேலாண்மை வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். உலகில் மிகப் பெரிய மற்றும் புதிதாக வளரும் முக்கிய நாடுகளின் ஒற்றுமை, உலகின் செழுமை மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கு முக்கிய பங்காற்றும் என்று கருதுகிறேன் என்றார்.