உலகிற்குச் சேவைபுரியும் சீனாவின் பெய்தோவ்
2022-11-05 18:11:20

உலக புவியிடங்காட்டி செயற்கைக்கோள் முறைமைகளுக்கான சர்வதேச கமிட்டியின் 16ஆவது மாநாடு அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் பிரதிநிதிக் கூறுகையில், சர்வதேச வளர்ச்சிக்கு பெய்தோவ் முறைமை பங்காற்றும். குறிப்பாக, தொடரவல்ல வளர்ச்சி இலக்கிற்காக பாடுபட்டு வரும் வளரும் நாடுகளுக்கு இம்முறைமை ஆதரவு அளிக்கும் என உறுதியுடன் நம்புவதாகத் தெரிவித்தார். புதிய யுகத்தில் சீனாவின் பெய்தோவ் என்ற தலைப்பில் சீனா நவம்பர் 4ஆம் நாள் வெளியிட்ட வெள்ளை அறிக்கை அவரது இம்மதிப்பீட்டுக்கு நிறைய ஆதாரச் சான்றுகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

12000 எழுத்துக்களைக் கொண்ட இவ்வெள்ளை அறிக்கையில், பெய்தோவ் புவியிடங்காட்டி முறைமையின் வளர்ச்சிப் போக்கு மீளாய்வு செய்யப்பட்டு, புதிய யுகத்தில் அதன் புதிய சேவைத் திறனும், தொழில் வளர்ச்சி, திறப்புக் கட்டமைப்பு, எதிர்காலப் பயணம் ஆகியவற்றில் அதன் பங்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெய்தோவ் முறைமை உருவாக்கப்பட்ட தொடக்கத்தில், கட்டுமானம், பயன்பாடு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளில் பெய்தோவ் முறைமை விரைவாக வளர்ந்து வந்துள்ளது. தற்போதைய பெய்தோவ்-3 முறைமை, அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பாவின் புவியிடங்காட்டி செயற்கைக் கோள் முறைமைகளுடன் இணைந்து முன்னேறி வருகிறது. தற்போது உலகளவில் 230க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 150 கோடிக்கும் அதிகமான பயனர்கள் பெய்தோவ் முறைமையின் சேவையைப் பயன்படுத்துகின்றனர். சீனாவின் பெய்தோவ், உலகிற்கான பெய்தோவ் ஆக மாறியுள்ளது.

தவிரவும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுடன் இணைந்து பெய்தோவ் தொழில் நுட்பம் மற்றும் பயன்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி வகுப்பை சீனா நடத்தி வருகிறது. இதன் மூலம், மேலதிக நாடுகளில் திறமைசாலிகள் வளர்க்கப்படுவதோடு, பெய்தோவ் முறைமையின் வளர்ச்சியில் பல்வேறு நாட்டு மக்களும் மேலும் பெரும் நன்மை பெற்று வருகின்றனர்.