புதிய யுகத்தில் சீன-ஜெர்மனி உறவின் வளர்ச்சி
2022-11-06 17:20:26

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜெர்மனி தலைமையமைச்சர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் நவம்பர் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்திப்பு நடத்திய போது கூறுகையில், ஜெர்மனியுடன் கூட்டாக முயற்சி மேற்கொண்டு, பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை உருவாக்கி, சீன-ஜெர்மனி மற்றும் சீன-ஐரோப்பிய உறவு புதிய வளர்ச்சி பெறுவதை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு சீனாவில் பயணம் மேற்கொண்ட முதலாவது ஐரோப்பிய தலைவராக ஸ்கோல்ஸ் திகழ்கிறார். இவ்வாண்டு சீன-ஜெர்மனி தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவாகும். ஷி ச்சின்பிங் கூறுகையில், ஒன்றுக்கொன்று மதிப்பு அளிப்பது, பொது உள்ளடக்கத்தைக் கண்டறிந்து கருத்து வேற்றுமைகளை ஒதுக்கிவைப்பது, ஒன்றுடன் ஒன்று பரிமாற்றம் மேற்கொள்வது, ஒத்துழைப்பின் வழியாக கூட்டு வெற்றி பெறுவது ஆகியவற்றைக் கொண்ட கோட்பாட்டுடன், இரு நாட்டுறவு சீரான வளர்ச்சி பெற முடியும் என்றார்.

மேலும், இரு நாடுகள் கூட்டு நலன் கொண்ட திட்டப்பணியைத் தொடர்ச்சியாக முன்னேற்றி, புதிய எரியாற்றல், செயற்கை நுண்ணறிவு, எண்ணியல்மயமாக்கம் உள்ளிட்ட புதிய துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார். சீன-ஜெர்மனி ஒத்துழைப்புக்கு பெரும் உள்ளார்ந்த ஆற்றல் உண்டு என்று இது காட்டுகிறது.