சீன-மடகாஸ்கர் அரசுத் தலைவர்களின் வாழ்த்து செய்தி
2022-11-06 17:39:31

சீன-மடகாஸ்கர் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நவம்பர் 6ஆம் நாள் இரு நாட்டு அரசுத் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துச் செய்தி அனுப்பினர்.

கடந்த 50 ஆண்டுகளில் இரு நாட்டுறவு சீராகவும் நிதானமாகவும் வளர்ந்து வருகின்றது. கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகள் பன்முக ஒத்துழைப்பு கூட்டாளியுறவை உருவாக்கி அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்புகளை மேற்கொண்டு வருகின்றன என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

கடந்த அரை நூற்றாண்டில், இரு நாடுகள் பல்வேறு துறைகளில் மேற்கொண்ட ஒத்துழைப்புகள் நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளன என்று மடகாஸ்கர் அரசுத் தலைவர் தெரிவித்தார்.