சீனாவின் வெளிநாட்டுத் திறப்பு குறியீடு
2022-11-06 17:35:17

5ஆவது ஹொங் ஜியாவ் சர்வதேச பொருளாதார மன்றக் கூட்டத்தில் 2022 உலக திறப்புப் பணி பற்றிய அறிக்கை 5ஆம் நாள் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின் படி, உயர் நிலை வெளிநாட்டுத் திறப்புப் பணியில் ஊன்றி நிற்கும் சீனா பல சாதனைகளைப் பெற்றுள்ளது. சீனாவின் திறப்பு குறியீடு 2012ஆம் ஆண்டில் இருந்த 0.7107 இலிருந்து, 2020ஆம் ஆண்டின் 0.7507ஆக அதிகரித்துள்ளது. இக்குறியீட்டு தரவரிசையிலுள்ள 47ஆவது இடத்திலிருந்து, 39ஆவது இடத்துக்கு உயர்ந்த சீனா, பொருளாதார உலகமயமாக்கத்தை முன்னேற்றும் முக்கிய ஆற்றலாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.