பழைய நண்பர்களுக்கு ஊக்கமளிக்கும் ஷிச்சின்பிங்கின் உரை
2022-11-06 17:18:02

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 4ஆம் நாளிரவு காணொளி வழியாக 5ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார். முன்பு இப்பொருட்காட்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டு தொழில் முனைவோர் பலர், திறப்பை மேலும் விரிவாக்குவதற்கு ஷிச்சின்பிங் அளித்த வாக்குறுதியை வெகுவாகப் பாராட்டினர்.

1987ஆம் ஆண்டில் சீனாவில் கூட்டு முதலீட்டு நிறுவனத்தை தொடங்கிய Panasonic Holding நிறுவனம் தொடர்ந்து 5 ஆண்டுகளில் சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் பங்கெடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் பேட்டியளிக்கையில், வெளிநாட்டுத் திறப்பில் சீனா நிலைத்து நின்று, திறப்பின் மூலம் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றும் என்பதை சீன அரசுத் தலைவரின் உரை வெளிக்காட்டியுள்ளது. இது வெளிநாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த தனக்கு ஊக்கமளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதே போல் 5 முறை இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டுள்ள துருக்கி வெளிநாட்டு பொருளாதார உறவு கமிட்டியின் ஆசிய-பசிபிக் செயற்குழுத் தலைவர் கூறுகையில், சீனாவின் முதலாவது இறக்குமதிப் பொருட்காட்சி முதல் தற்போது வரை, துருக்கியைச் சேர்ந்த சுமார் 100 சிறந்த தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளன. சீனாவுக்கான அவற்றின் ஏற்றுமதி 50 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு சீனா பல ஆதரவு நடவடிக்கைகளை வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.