டெல்லியில் காற்று மாசுபாட்டால் 80 விழுக்காட்டினருக்குப் பாதிப்பு
2022-11-06 18:33:26

இந்தியாவின் தலைநகரான டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினர் காற்று மாசுபாடு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புதிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.  

கடந்த சில நாட்களாக, காற்றுத் தரக் குறியீடு கடுமையான நிலையை தொட்டது. கணக்கெடுப்பில் பங்கெடுத்தவர்களில் 18 விழுக்காட்டினர், மருத்துவர் அல்லது மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.    

டெல்லி மற்றும் அருகிலுள்ள நொய்டா, காசியாபாத், குருகிராம், ஃபரிதாபாத் ஆகிய நகரங்களில் வசிப்பவர்களிடமிருந்து இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.