சர்க்கரை ஏற்றுமதி கொள்கையைச் சரி செய்த இந்தியா
2022-11-06 18:31:22

சர்க்கரை ஏற்றுமதிக் கொள்கையைச் சரி செய்து, அடுத்த ஆண்டு மே 31ஆம் நாளுக்குள் பங்கீட்டின்படி 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிப்பதாக இந்திய அரசு நவம்பர் 5ஆம் நாள் அறிவித்தது.

உள்நாட்டில் விலைவாசி நிலைப்பை உறுதி செய்யும் விதம், 2022ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2023ஆம் ஆண்டு மே 31ஆம் நாள் வரை, நியாயமான கட்டுப்பாட்டின் வரம்புக்குள் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க அரசு தீரமானித்துள்ளது என்று அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் மிகப் பெரிய சர்க்கரை உற்பத்தி நாடாகவும் 2ஆவது பெரிய சர்க்கரை ஏற்றுமதி நாடாகவும் இந்தியா மாறியுள்ளது என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.