சீனாவின் புதிய தொலைத்தொடர்பு செயற்கைக் கோள் ஏவுதல்
2022-11-06 16:54:17

சீனாவின் தொலைத்தொடர்பு செயற்கைக் கோள் ஒன்று நவம்பர் 5ஆம் நாளிரவு 7:50 மணிக்கு ஷிட்சாங் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து லாங்மார்ச்-3பி ஏவூர்தியின் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் இச்செயற்கைக் கோள் தடையின்றி நுழைந்ததோடு, ஏவுதல் பணி இனிதே நிறைவடைந்தது.

பசிபிக் பெருங்கடல் கடந்த போக்குவரத்து நெறிகளுக்கும், கிழக்கு பசிபிக் மற்றும் வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிக்கும் “ChinaSat 19” எனும் இந்தச் செயற்கைக் கோள் தொலைத்தொடர்பு சேவையை வழங்கும்.