சீனாவின் செய்தி ஊடகப் பணியளர்களுக்கான உதவி திட்டப்பணி
2022-11-06 19:41:11

2022ஆம் ஆண்டு சீனாவின் செய்தி ஊடகப் பணியளர்களுக்கான உதவி திட்டப்பணியின் கீழுள்ள, உதவி வழங்கப்படும் பெயர் பட்டியல், உதவி மதிப்பு ஆகியவற்றைச் சீனச் செய்தியாளர் சங்கம் நவம்பர் 6ஆம் நாள் வெளியிட்டது. 4 மத்திய செய்தி ஊடகங்களையும், 26 மாநிலங்கள், பிரதேசங்கள் மற்றும் மாநகரங்களின் 73 உள்ளூர் செய்தி ஊடகங்களையும் சேர்ந்த 91 பணியாளர்கள் 40 லட்சத்து 10 ஆயிரம் யுவான் மதிப்புள்ள நிதி உதவியைப் பெற்றனர். பணியால் உயிரிழந்த, காயமுற்ற அல்லது நோய்வாய்ப்பட்ட செய்தி ஊடகப் பணியாளர்களுக்கு, சீனச் செய்தியாளர் சங்கம் தொடர்ந்து 9 ஆண்டுகளாக நிதி உதவியளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.