உலகுடன் 3 பெரிய வாய்ப்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ள சீனா
2022-11-06 16:51:36

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 4ஆம் நாளிரவு காணொளி வழியாக 5ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் பங்கெடுத்து உரை நிகழ்த்துகையில், பல்வேறு நாடுகள் மற்றும் தரப்புகளுடன் இணைந்து வாய்ப்புகளின் பகிர்வை சீனா முன்னேற்றும் என்று தெரிவித்தார். இந்த உரை அனைவருக்கும் ஊக்கமளித்து, உயர்நிலை திறப்பை சீனா விரிவாக்கி, கூட்டு வளர்ச்சியை மேம்படுத்தும் மன உறுதியை வெளிப்படுத்தியுள்ளது என கருதப்படுகிறது.

பண வீக்கம், தொற்று நோய், புவி அமைவு சார் மோதல் ஆகியவற்றின் பின்னணியில், திட்டப்படி துவங்கிய 5ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி, உலகிற்கு அவசியமான இயக்காற்றலைக் கொண்டு வந்துள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு சீனா நடத்திய முதலாவது முக்கிய சர்வதேச பொருட்காட்சி இதுவாகும். 145 நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளும் உலகின் முன்னணியிலுள்ள 284 தொழில் நிறுவனங்களும் இதில் பங்கெடுத்துள்ளன. சீனா அளிக்கக் கூடிய வாய்ப்புகள் மீதான எதிர்பார்ப்பை இது காட்டுகிறது.

சீனாவின் பெரிய சந்தை, திறப்புக் கொள்கை, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை கொண்டு வரும் வாய்ப்புகளை பல்வேறு நாடுகள் மற்றும் தரப்புகள் கூட்டாக பகிர்ந்து கொள்வதை சீனா முன்னேற்றும் என்று ஷிச்சின்பிங் தனது உரையில் தெரிவித்தார். கடினமாக மீட்சி அடைந்து வரும் உலகப் பொருளாதாரத்துக்கு இந்த மூன்று வாய்ப்புகள் வலுவான நேர்மறை ஆற்றலை ஊட்டும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.