© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஈரநிலங்கள் பற்றிய பொது ஒப்பந்த தரப்புகளின் 14ஆவது மாநாட்டின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் காணொளி வழியாக பங்கெடுத்து உரை நிகழ்த்துகையில், ஈரநிலப் பாதுகாப்புக்கான மூன்று கருத்துக்களை முன்வைத்து, எதிர்காலத்தில் சீனா மேற்கொள்ளும் யதார்த்த நடவடிக்கையை அறிவித்தார். உலகளாவிய ஈரநிலப் பாதுகாப்புக்கு இது தெளிவான திட்டத்தை வரைந்துள்ளது.
கடந்த நூற்றாண்டின் 70ஆம் ஆண்டுகளிலிருந்து உலகளவில் ஈரநிலப் பரப்பளவு 35 விழுக்காடு குறைந்துள்ளது. தற்போதுள்ள ஈரநிலங்களின் தரம், மாசுபாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பாதிப்புகளால் குறைந்து வருகிறது. இத்தகைய பின்னணியில், ஈரநிலப் பாதுகாப்புக்கான ஒத்த கருத்துக்களை உலகளவில் திரட்ட வேண்டும், உலகளாவிய ஈரநிலப் பாதுகாப்பை முன்னேற்ற வேண்டும், ஈரநிலங்களின் பங்கினை வெளிகொணர்ந்து பொது மக்களுக்கு மேலதிக நன்மைகளை வழங்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் முன்மொழிந்தார்.
தற்போதைய சீனாவில், ஈரநிலங்களின் காட்சிகள், இயற்கையான ஓவியமாகவும் அழகான சீனாவின் உருவப்படமாகவும், சீனாவின் உயிரின நாகரிகக் கட்டுமானத்தின் சாதனையை வெளிப்படுத்துகின்றன.
மனிதர்கள் இயற்கையுடனான இசைவான சக வாழ்வு, சீன பாணியுடைய நவீனமயமாக்கத்தின் 5 அடிப்படை தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். சுற்றுச்சூழலுக்கும் வளர்ச்சிக்கும் இடையே ஒன்றை ஒன்று மேம்படுத்தும் தொடர்பு பற்றி சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கான அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டு, உலகளாவிய சூழலியல் பிரச்சினையைச் சமாளிப்பதற்கு நம்பிக்கை மற்றும் இயக்காற்றல் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், தேசிய அளவிலான ஈரநிலப் பாதுகாப்புத் திட்டப்பணிகள் நடைமுறைக்கு வரும். இதன் மூலம், புதிய பயணத்தில் காலடி எடுத்து வைத்துள்ள சீனா, மனிதர்கள் இயற்கையுடன் இணக்கமாகப் பழகும் நவீனமயமாக்கத்தையும் ஈரநிலப் பாதுகாப்புப் பணியின் உயர்தர வளர்ச்சியையும் தொடர்ந்து முன்னேற்றும் என்பதை அனைவரும் கண்டறியலாம்.