பல சர்வதேச எரியாற்றல் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு
2022-11-07 15:57:59

ஷாங்காய் மாநகரில் நடைபெற்று வரும் சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் சீன எண்ணெய் மற்றும் இயற்கை வாயு குழாய் வலைப்பின்னல் நிறுவனம், பல சர்வதேச எரியாற்றல் நிறுவனங்களுடன் ஒத்துழைப்புகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன், இது, திரவ இயற்கை எரிவாயு பற்றிய ஒத்துழைப்பை மேற்கொள்ளவுள்ளது. சீனாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் போன்ற அடிப்படை வசதிகளின் சந்தை ரீதியிலான திறப்பு முன்னேற்றத்துக்கு உதவும்.

தற்போது, சீன எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குழாய் வலைப்பின்னல் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும்இயற்கை எரிவாயுவை மேற்கிலிருந்து கிழக்கிற்கு கொண்டு செல்லும் திட்டப்பணி உள்ளிட்ட முக்கிய தேசிய எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களின் நீளம், 98 ஆயிரம் கிலோமீட்டரை எட்டியது.

இது ஒருங்கிணைந்த மேலாண்மை, ஒருங்கிணைந்த அனுப்புதல் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டுடன் “ஒரு தேசிய வலையமைப்பை” உருவாக்கி உள்ளது.