இணைய வெளியில் பகிரப்பட்ட எதிர்காலம் கொண்ட சமூகம் பற்றிய வெள்ளை அறிக்கை
2022-11-07 15:54:38

‘இணைய வெளியில் பகிரப்பட்ட எதிர்காலம் கொண்ட சமூகத்தைக் கூட்டாக கட்டியமைப்பது’ என்ற வெள்ளை அறிக்கையைச் சீனா 7ஆம் நாள் திங்கள்கிழமை வெளியிட்டது. புதிய காலத்தில் இணைய வளர்ச்சி மற்றும் நிர்வாகம் பற்றிய சீனாவின் கண்ணோட்டங்களும் நடைமுறைகளும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இணைய வெளியிலான சர்வதேசப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, எண்முறைப் பொருளாதார ஒத்துழைப்பை விரிவாக்கி, இணையப் பாதுகாப்பைக் கூட்டாகப் பேணிக்காத்து, உலகளாவிய இணைய நிர்வாக அமைப்புமுறையின் சீர்திருத்தம் மற்றும் உருவாக்கப் பணிகளில் பங்கேற்குவதற்காக சீனா பாடுபட்டு வருகிறது என்று இதில் கூறப்பட்டுள்ளது.

உலக நாடுகளுடன் இணைந்து, இணைய வெளியில் பகிரப்பட்ட எதிர்காலம் கொண்ட சமூகத்தையும்,மனிதகுலத்திற்கு அருமையான எதிர்காலத்தையும் உருவாக்க வேண்டுமென சீனா விரும்புவதாக இந்த வெள்ளையறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.