விக்டோரியா ஏரிப் பரப்பில் நிகழ்ந்த விமான விபத்தில் 19 பேர் பலி
2022-11-07 11:28:02

தான்சானியாவின் ககேரா பிரதேசத்தின் விக்டோரியா ஏரிப் பரப்பில் நிகழ்ந்த விமான விபத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு தலைமையமைச்சர் காசிம் மஜலிவா நவம்பர் 6ஆம் நாள் கூறினார்.

இந்த விமானம் தரையிறங்குவதற்கு முன்பு மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்திற்கு அருகிலுள்ள விக்டோரியா ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த நிறுவனத்தின் தொழில்நுட்பப் பணியாளர்கள், தான்சானியா பயணியர் விமான சேவை ஆணையத்தின் நிபுணர்களுடன் விசாரணைக் குழுவை உருவாக்கி சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்று ககேரா பிரதேசத்தின் காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.