காலநிலை மாற்ற சமாளிப்பு பற்றி இளைஞர்களின் கருத்துக்கள்
2022-11-07 16:35:47

காலநிலை மாற்றத்துக்கான ஐ.நாவின் கட்டுக்கோப்பு ஒப்பந்த தரப்புகளின் 27ஆவது மாநாட்டில், இளைஞரின் காலநிலை நடவடிக்கை என்ற தலைப்பிலான கூட்டம் நவம்பர் 6ஆம் நாள் சீனக் காட்சியிடத்தில் நடைபெற்றது. இளைஞர்களின் பார்வையில் காலநிலை மாற்றப் பிரச்சினையும் இதனைச் சமாளிப்பதற்கான அவர்களின் கருத்துக்களும் இக்கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கூட்டத்தின் கடைசியில், சீனா, பிரான்ஸ், இந்தியா, லைபிரியா உள்ளிட்ட நாடுகளின் இளைஞர்கள் பலர், காலநிலை மாற்ற சமாளிப்பு நடவடிக்கைகள் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். 2022 உலகளாவிய இளைஞர் காலநிலை நடவடிக்கை பற்றிய முன்மொழிவையும் அவர்கள் பன்னாட்டு மொழிகளில் உலகிற்கு வழங்கினர்.