வெளிநாட்டு நிறுவனங்களின் புதிய தயாரிப்புகளில் சீனப் பண்பாட்டுக் கூறுகள்
2022-11-07 19:42:52

5ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் புகழ்பெற்ற வெளிநாட்டு வணிகச் சின்னமுடைய தயாரிப்புகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன. இந்த வணிகப் பொருட்களில் சீனப் பண்பாட்டுக் கூறுகள் சிறப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரியாவின் Swarovski எனும் பளிங்கு நகைகள் தயாரிப்பு நிறுவனம், சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் 3 முறை கலந்து கொண்டுள்ளது. சீனாவின் மங்களகரமான சின்னமுடைய அலங்காரப் பொருட்களை இந்நிறுவனம் வடிவமைத்து தயாரித்துள்ளது.

இப்பொருட்காட்சியில் தொடர்ந்து 5 முறை கலந்து கொண்டுள்ள LEGO குழுமம், சீனப் பண்பாடு மற்றும் பாரம்பரியத்திலிருந்து பெற்ற புத்துணர்வுடன் வடிவமைத்த பொம்மைகளை புதிதாக வெளியிட்டுள்ளது. 

நியூயார்கில் பிறந்த COACH நிறுவனம், சீனாவின் புகழ்பெற்ற வெள்ளை முயல் எனும் இனிப்பு தயாரிப்பு நிறுவனத்துடன் ஒத்துழைத்து, புதிய தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது.