சீனாவில் அந்நிய செலாவணி கையிருப்பு தொகை அதிகரிப்பு
2022-11-07 19:51:55

சீனத் தேசிய அந்நிய செலாவணி நிர்வாகம் நவம்பர் 7ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் இறுதி வரை, சீனாவில் அந்நிய செலாவணி கையிருப்பு தொகை 3 லட்சத்து 5 ஆயிரத்து 240 கோடி அமெரிக்க டாலராகும். செப்டம்பர் திங்கள் இறுதியில் இருந்ததை விட 2350 கோடி அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளது. அதன் அதிகரிப்பு விகிதம் 0.77 விழுக்காடாகும்.

இந்நிர்வாகத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், சீனப் பொருளாதாரத்துக்கு பெரும் உறுதித் தன்மை மற்றும் உள்ளார்ந்த ஆற்றல் உள்ளது. அதன் சீரான வளர்ச்சிப் போக்கு மாறாது. அந்நிய செலாவணி கையிருப்பு அளவின் நிலைப்புத் தன்மையை நிலைநிறுத்துவதற்கு இது ஆதரவு அளித்து வருகிறது என்றார்.