சீனாவில் மின்னாற்றல் வினியோகத்தின் அதிகரிப்பு
2022-11-07 16:57:43

சீன சமூக அறிவியல் கழகத்தின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச எரியாற்றல் பாதுகாப்பு ஆய்வு மையமும், சமூக அறிவியல் ஆவண வெளியீட்டு நிறுவனமும் 2022 உலக எரியாற்றல் வளர்ச்சி அறிக்கையைக் கூட்டாக வெளியிட்டன. 2023 2024 ஆகிய ஆண்டுகளில், உலகளவில் மின்னாற்றல் தேவையின் அதிகரிப்பு வேகம் குறையும். புதுப்பிக்கவல்ல எரியாற்றல், மின்னாற்றல் வினியோக அதிகரிப்புக்கு முக்கிய மூலமாக இருக்கும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மதிப்பீட்டின் படி, 2021 முதல் 2024ஆம் ஆண்டு வரை, பெரும்பாலான மின்னாற்றல் வினியோக அதிகரிப்பு, சீனாவில் ஏற்படும். இந்த அதிகரிப்பு அளவு உலக மொத்த அதிகரிப்பில் பாதியளவாக வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.