உயர்நிலை திறப்பை முன்னேற்றும் சீனா
2022-11-07 17:27:28

வெளிநாட்டு நிறுவனங்களின் பார்வையில் சீனா பற்றி, HSBC நிறுவனம் நவம்பர் 6ஆம் நாள் சிறப்பு ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. சீனாவிலுள்ள தங்கள் அலுவல்கள் வரும் ஓராண்டில் அதிகரிக்கும் என ஆய்வுக்குட்பட்ட நிறுவனங்களில் 80 விழுக்காட்டுக்கும் மேலானவை மதிப்பீடு செய்துள்ளன. மேலும், ஆர்சிஇபி எனும் பிரதேச பன்முகப் பொருளாதாரக் கூட்டுறவு உடன்படிக்கையின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 93 விழுக்காடு நிறுவனங்கள் சீனாவுடனான வர்த்தகத் தொடர்புகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லிஜியன் 7ஆம் நாள் இது குறித்து பேசுகையில், உலகின் 16 முக்கிய சந்தைகளிலுள்ள சுமார் 3400 தொழில் நிறுவனங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இனிமேல், உயர்நிலை திறப்பை சீனா தொடர்ந்து முன்னேற்றி, சீனாவில் முதலீடு செய்யவும் தொழில் நடத்தவும் பல்வேறு நாடுகளின் தொழில் நிறுவனங்களுக்கு வசதியளிக்கும் என்று தெரிவித்தார்.