ஈரநிலப் பாதுகாப்புக்கான வூஹான் அறிக்கை
2022-11-07 16:34:49

ஈரநிலங்கள் பற்றிய பொது ஒப்பந்த தரப்புகளின் 14ஆவது மாநாட்டின் அமைச்சர் நிலை கூட்டம் நவம்பர் 6ஆம் நாள் சீனாவின் வூஹான் நகரில் நிறைவுற்றது. இதில், வூஹான் அறிக்கை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு, உலகளவில் ஈரநில தரக்குறைவினால் ஏற்படும் இடர்பாட்டைத் தடுத்து மாற்றும் விதம், பல்வேறு தரப்புகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வூஹான் அறிக்கை, நடப்பு மாநாட்டின் முக்கிய சாதனையாகும். சீன வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்தின் துணைத் தலைவர் கூறுகையில், பல்வேறு தரப்புகளின் பொது கருத்தை ஒன்று திரட்டி, உலகளாவிய விருப்பத்தை வெளிக்காட்டும் முக்கிய ஆவணமாகும் என்று தெரிவித்தார்.

ஈரநிலப் பாதுகாப்பில் சீனாவின் தலைமை ஆற்றலைக் கண்டுள்ளோம் என்று ஈரநிலங்கள் பற்றிய பொது ஒப்பந்த அமைப்பின் தலைமைச் செயலாளர் கூறியதோடு, எதிர்காலத்தில் பல்வேறு தரப்புகள் மேலும் உயர்தர சர்வதேச ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.