சாகோஸ் தீவுகள் மட்டுமல்லாமல், மால்வினாஸ் தீவுகள் குறித்தும் பிரிட்டன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
2022-11-08 10:05:30

சாகோஸ் தீவுகளின் உரிமை குறித்து பேச்ச்வார்த்தை நடத்த பிரிட்டனும் மொரிஷியஸும் முடிவு எடுத்துள்ளதாகவும், அடுத்த ஆண்டில் முதற்கட்ட உடன்படிக்கையை உருவாக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும்  பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜேமஸ் கிளிவெர்லி சமீபத்தில் தெரிவித்தார். இதனால், சாகோஸ் தீவுகளின் உரிமை குறித்த சர்ச்சையைத் தீர்க்கும் முன்னேற்றப் போக்கில் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது.

சாகோஸ் தீவுக்கூட்டம், இந்தியப் பெருங்கடலின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. அது, ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸுக்கு சொந்தமானது. 1968ஆம் ஆண்டு மொரிஷியஸ் சுதந்திரம் பெற்ற பிறகு,  பிரிட்டனிடம் இருந்து இந்த தீவுகளை திரும்ப பெற கோரி வருகிறது. ஆனால், பிரிட்டன் அதை திரும்ப கொடுக்காமல் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல், அமெரிக்க ராணுவம் தீவுகளில் ராணுவத் தளத்தைக் கட்டியமைப்பதற்கும் பிரிட்டன் ஆதரவு அளித்தது.

சாகோஸ் தீவுகளின் வரலாறு குறித்து பன்னாட்டு சமூகத்தில் தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது. இந்நிலையில், மொரிஷியஸின் கோரிக்கைக்கு பன்னாட்டுச் சமூகத்தின் ஆதரவு கிடைத்துள்ளது.

மொரிஷியஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக, பிரிட்டன் அறிவித்ததைத் தொடர்ந்து, மால்வினாஸ் தீவுகளின் உரிமை குறித்து பிரிட்டன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துமாறு அர்ஜெண்டினா மீண்டும் கோரியுள்ளது. தற்போது, சாகோஸ் தீவுகள் சர்ச்சையில் பிரிட்டன் எடுத்துள்ள முடிவு,  குறிப்பிட்ட அளவில் ஐ.நா.வின் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. பன்னாட்டு சமூகம் காலனித்துவத்தை எதிர்த்து போராடுவதில் கிடைத்த முன்னேற்றம் இதுவாகும். மொரிஷியஸுடன் சாகோஸ் தீவுகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் பிரிட்டன், அர்ஜெண்டினாவின் கோரிக்கைக்கு முனைப்புடன் பதில் அளித்து, கூடிய விரைவில் மால்வினாஸ் தீவுகளை திரும்பக் கொடுக்க வேண்டும்.

21ஆம் நூற்றாண்டில் காலனித்துவம் மற்றும் மேலாதிக்கம் ஆகியவற்றுக்கு இடம் இல்லை. பிரிட்டன் காலனித்துவ ஆட்சியில் அனைத்து கடன்களையும் திரும்பக் கொடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.