அமெரிக்க பொருளாதாரம் தோல்வி: 56விழுக்காட்டினர் கருத்து
2022-11-08 10:28:10

மார்னிங்  கன்சல்ட் எனும் கருத்து கணிப்பு நிறுவனம் வெளியிட்ட புதிய கணிப்பின்படி, அமெரிக்கப் பொருளாதார பிரச்சினைகள் இடைக்காலத் தேர்தல் முடிவைப் பாதிக்கும். அமெரிக்கப் பொருளாதாரம் தோல்வியடைந்தது என்று கணிப்பில் கலந்து கொண்ட 56விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களில் அமெரிக்காவின் நுகர்வோரின் நம்பிக்கை குறியீடு 2020ஆம் ஆண்டு கோவிட்-19க்கான ஊரடங்கு காலத்தில் இருந்ததை விட, மேலும் குறைந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் 7ஆம் நாள் தெரிவித்தது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி நாணயக் கொள்கையைக் கடுமையாக்கி வருவதால், பங்கு சந்தையும் வீட்டுச் சந்தையும் மந்தமாக உள்ளன. அமெரிக்கப் பொருளாதாரம் அடுத்தாண்டு வீழ்ச்சி அடையத் தொடங்குமென பொருளியலாளர்கள் பலர் மதிப்பிட்டுள்ளனர்.