சீன-ஐரோப்பிய உறவைப் பகுத்தறிவுடன் பார்க்க வேண்டும்:சீனா
2022-11-08 17:13:50

சீனா பற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்து குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லிஜியன் நவம்பர் 8ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ஐரோப்பிய தரப்பு பகுத்தறிவுடன் சீன-ஐரோப்பிய உறவைக் கருத்தில் கொண்டு, சீனாவுடன் இணைந்து, பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை மேற்கொண்டு, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறக்கூடிய அடிப்படையைப் பேணிக்காக்கவும், சீனாவுடன் ஒத்துழைப்பு மூலம் உலகளாவிய சவால்களைச் சமாளித்து, பதற்றமான உலகிற்கு மேலும் பெரும் உறுதித்தன்மை மற்றும் நேர்மறை ஆற்றலை வழங்கவும் வேண்டும். இது சீனா மற்றும் ஐரோப்பாவுக்கு மட்டுல்ல, முழு உலகிற்கும் துணைபுரியும் என்று தெரிவித்தார்.