உலகிற்கு சீனாவின் திறப்பை வெளிக்காட்டிய ஹோங்ஜியாவ் மன்றக் கூட்டம்
2022-11-08 16:44:02

5ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியைச் சேர்ந்த ஹோங்ஜியாவ் சர்வதேச பொருளாதார மன்றக் கூட்டத்தின் கடைசியான 2 கருத்தரங்குகள் நவம்பர் 7ஆம் நாள் பிற்பகல் நடைபெற்றன. அதனுடன், இம்மன்றக் கூட்டத்தின் கீழுள்ள 24 நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுற்றன. இறக்குமதிப் பொருட்காட்சியின் முக்கிய பகுதியான இம்மன்றக் கூட்டம், உலகளாவிய திறப்பு என்ற கருப்பொருளில், சீனா தொடர்ந்து திறப்பை விரிவாக்கும் மன உறுதியை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது.

நடப்பு மன்றக் கூட்டத்தில், திறப்பு மற்றும் கூட்டு பொறுப்பு, திறப்பு மற்றும் கூட்டு நிர்வாகம், திறப்பு மற்றும் கூட்டு பகிர்வு ஆகிய மூன்று கிளையான கருத்தரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்போது, நடைபெற்ற ஆர்சிஇபி மற்றும் மேலும் உயர்நிலை திறப்பு என்ற கருத்தரங்கு உள்ளிட்ட நிகழ்வுகளின் மூலம், பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், நிபுணர்கள் மற்றும் அறிஞர்களுக்கு கருத்து பரிமாற்ற மேடைகள் வழங்கப்பட்டுள்ளன.