கம்போடியாவில் சீனத் தலைமையமைச்சர் பயணம்
2022-11-08 16:43:39

கம்போடியத் தலைமையமைச்சர் சம்தேக் ஹன் செனின் அழைப்பை ஏற்று, சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் நவம்பர் 8ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு கம்போடியாவுக்குச் சென்றார். இப்பயணத்தின் போது, 25வது சீன-ஆசியான் நாடுகள்(10+1)தலைவர்களின் கூட்டம், 25வது ஆசியான் நாடுகள்-சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா(10+3)தலைவர்களின் கூட்டம், 17வது கிழக்காசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் லீ கெச்சியாங் பங்கெடுத்து, கம்போடியாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்வார்.