ஐ.நா. பொது பேரவைத் தலைவருடன் வாங் யீ சந்திப்பு
2022-11-08 16:16:30

 

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, அழைப்பின் பேரில் நவம்பர் 7ஆம் நாள் காணொளி வழியாக ஐ.நா. பொது பேரவைத் தலைவர் கொரோஸியுடன் சந்திப்பு நடத்தினார்.

வாங் யீ கூறுகையில், ஐ.நாவின் குறிக்கோள் மற்றும் ஐ.நா. பொது பேரவையின் முக்கிய பங்கிற்கு சீனா எப்போதும் ஆதரவளிக்கிறது. காலநிலை மாற்றத்துக்கான சர்வதேச ஒத்துழைப்பில் முன்பைப் போல் பங்கெடுத்து வரும் சீனா, காலநிலை மாற்றத்துக்கான ஐ.நா. கட்டுக்கோப்பு ஒப்பந்தத் தரப்புகளின் 27ஆவது மாநாட்டின் வெற்றிக்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றும். உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பைச் செயல்படுத்துவதன் மூலம் பல்வேறு நாடுகளுடன் நீர்வளம் சார் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த கொரோஸி, சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்பவையின் சீர்திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றியும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.