நிறுவனங்களுக்கு புத்தாக்க வாய்ப்பளிக்கும் சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி
2022-11-09 10:21:57

5ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் உலகளாவிய நிலையிலும் ஆசிய அளவிலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உற்பத்திப் பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை பார்வையாளர்களுக்கு புத்தம் புதிய அனுபவத்தைக் கொண்டு வருவதோடு, உலகின் புத்தாக்க ஆற்றலையும் வெளிக்காட்டியுள்ளன. பல்வேறு தொழில்நிறுவனங்களிடையே புத்தாக்க வாய்ப்புகளின் பகிர்வுக்கு ஒரு நல்ல மேடையாக இந்தப் பொருட்காட்சி மாறியுள்ளது.

புள்ளிவிவரங்களின்படி, கடந்த 4 பொருட்காட்சிகளில் வெளியிடப்பட்ட புதிய உற்பத்திப் பொருட்கள், புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய சேவைகளின் மொத்த எண்ணிக்கை 1500ஐ தாண்டியது. நடப்புப் பொருட்காட்சியில் 94 வெளியீட்டு நிகழ்ச்சிகளில் 170க்கும் அதிகமான புதிய உற்பத்திப் பொருட்கள் வெளியிடவுள்ளன.

மேலும் அதிகமான புதிய பொருட்கள் சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் வெளியிடப்படுவதற்கான காரணம் என்ன?

140கோடி மக்கள் தொகை மற்றும் 40கோடிக்கும் அதிகமான இடைநிலை வருவாய் பெறுவோரைச் சீனா கொண்டுள்ளது.  கடந்த 5 ஆண்டுகளில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்நிறுவனங்கள், சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி மூலம் மாபெரும் சந்தை கொண்ட சீனாவில் தங்களது புத்தாக்க சாதனைகளை வெளியிடும் தலைசிறந்த இடத்தைக் கண்டுபிடித்தன. மேலும் பல்வேறு நாடுகள் மற்றும் பல்வேறு தரப்புகளுடன் சீனாவின் சந்தை வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வதைத் தொடர்ந்து முன்னேற்றுமென சீனா நடப்புப் பொருட்காட்சியில் வாக்குறுதி வழங்கியது.

திறப்பு மூலம் ஒத்துழைப்பு முன்னெடுக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில், சர்வதேச வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான உந்து ஆற்றலாக சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி பங்காற்றியுள்ளது.