காலநிலை நிதிக்கான வாக்குறுதியை வளர்ந்த நாடுள் நிறைவேற்ற வேண்டும்:சீனப் பிரதிநிதி
2022-11-09 16:25:03

காலநிலை நிதி திரட்டலில் 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை வழங்குவதற்கான வாக்குறுதியை வளர்ந்த நாடுகள் கூடிய விரைவில் நிறைவேற்ற வேண்டும். இதனிடையே வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கிடையே நம்பிக்கை மற்றும் கூட்டு செயல்பாட்டின் ஆற்றலை அதிகரிக்கும் விதம், நிதித் தொகையை இரட்டிப்பாக்குவதற்குப் பொருந்தும் நெறிவரைப்படத்தை வகுக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவரின் சிறப்பு பிரதிநிதியும், காலநிலை மாற்ற விவகாரத்துக்கான சீனாவின் சிறப்பு தூதருமான சியே ஜென்ஹுவா நவம்பர் 8ஆம் நாள் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்துக்கான ஐ.நாவின் கட்டுக்கோப்பு ஒப்பந்தத் தரப்புகளின் 27ஆவது மாநாட்டின் உலகத் தலைவர்கள் உச்சிமாநாட்டில் இதைத் தெரிவித்த அவர், மேலும் கூறுகையில், பலதரப்புவாதம், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு, இக்கட்டான நிலையிலிருந்து விடுபடுவதற்கு இன்றியமையாத வழிமுறையாகும். பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்பு என்ற கோட்பாடு, தேசிய ரீதியில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு இயங்குமுறை ஆகியவை சவால்களைத் தோற்கடிப்பதற்கான அவசிய தேர்வுகளாகும் என்றும் தெரிவித்தார்.