அக்டோரில் சீனாவின் சிபிஐ 2.1விழுக்காடு உயர்வு
2022-11-09 10:25:15

கடந்த அக்டோபரில், சீனாவின் நுகர்வோர் விலை குறியீடு (சி.பி.ஐ.) 2.1விழுக்காடு உயர்ந்துள்ளது என்று சீனத் தேசிய புள்ளிவிவர அலுவலகம் புதன்கிழமை தெரிவித்தது.

இந்த குறியீடு நகரப்புறங்களில் 2 விழுக்காடாகவும், கிராமப்புறங்களில் 2.5 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது. இவ்வாண்டின் முதல் 10 திங்கள் காலங்களில், நுகர்வோர் விலை குறியீடு சராசரியாக  கடந்த ஆண்டை விட 2 விழுக்காடு உயர்ந்துள்ளது