அமெரிக்காவின் தடை நடவடிக்கையின் மீதான சீனாவின் எதிர்ப்பு
2022-11-09 18:10:53

சீனாவில் முதலீடு செய்வதன் மீது கடந்த அமெரிக்க அரசு மேற்கொண்ட தடை நடவடிக்கையை தற்போதைய அரசு தொடர்ந்து மேற்கொள்கின்றது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் சாவ் லிச்சியன் 9ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

தவறான நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளும் அமெரிக்கா இயல்பான சந்தை விதிமுறையையும் ஒழுங்கையும் சீர்க்குலைத்து, சீன தொழில் நிறுவனங்களின் நலனையும் அமெரிக்க முதலீட்டளர் உள்ளிட்ட உலக முதலீட்டளர்களின் நலனையும் பாதித்துள்ளது. இதனை சீனா உறுதியாக எதிர்க்கிறது என்றார்.

அமெரிக்கா, சட்டத்துக்கும் சந்தைக்கும் மதிப்பு அளித்து தவறான நடவடிக்கையை நிறுத்த வேண்டும். சீன தொழில் நிறுவனங்களின் சட்டப்பூர்வ உரிமை மற்றும் நலனை சீனா உறுதியாக பேணிக்காக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.