பல்வேறு நாடுகளின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் சீனக் கட்டுமானப் பணி
2022-11-09 16:52:19

பல்வேறு நாடுகளின் வளர்ச்சிக்கு சீனக் கட்டுமானப் பணி தொடர்ச்சியாக ஆதரவு அளித்து, பல்வேறு நாட்டு மக்களுக்கு மேலதிக உண்மையான பயன்களை வழங்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லீஜியான் நவம்பர் 9ஆம் நாள் தெரிவித்தார்.

மேலும், உலகின் பல்வேறு இடங்களிலுள்ள அடிப்படை வசதி கட்டுமானத்தில் சீனா பங்கெடுத்துள்ளது. பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்வாதாரத்தின் மேம்பாட்டுக்கும் இது துணைப் புரிந்து, உள்ளூர் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. சீனக் கட்டுமானமானது, சீனாவின் ஒத்துழைப்புக் கூட்டாளிகளின் நம்பகமான தேர்வாகும் என்றும் அவர் தெரிவித்தார்.