ஏவப்பட உள்ள தியன்சோ-5 சரக்கு விண்கலம்
2022-11-09 16:08:42

சீன மனிதரை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பணியகம் வெளியிட்ட தகவலின்படி, தியன்சோ-5 சரக்கு விண்கலம் மற்றும் லாங்மார்ச்-7-Y6 ஏவூர்தி நவம்பர் 9ஆம் நாள் ஏவுதல் பகுதிக்கு ஏற்றிச் செல்லப்பட்டன. தற்போது வென்சாங் ஏவுத் தளத்திலுள்ள வசதிகள் மற்றும் சாதனங்கள் சீரான நிலையில் உள்ளன. ஏவுதலுக்கு முந்தைய செயல்பாட்டுச் சரிபார்ப்பு, கூட்டு சோதனை உள்ளிட்ட பணிகள் திட்டப்படி மேற்கொள்ளப்பட உள்ளன. எதிர்வரும் பொருத்தமான நேரத்தில் இவ்விண்கலம் ஏவப்பட உள்ளது.