சீனா-தீவு நாடுகளின் கடல் சார் ஒத்துழைப்பு பற்றிய கருத்தரங்கு
2022-11-10 17:30:35

சீனா-தீவு நாடுகளின் கடல் சார் ஒத்துழைப்பு பற்றிய கருத்தரங்கு நவம்பர் 9, 10 ஆகிய நாட்களில் ஃபூஜியன் மாநிலத்தின் பிங்தான் மாவட்டத்தில் நடைபெற்றது. தீவு நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் காலநிலை மாற்றம், பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சி, கடல் சூழல் பாதுகாப்பு மற்றும் சீராக்கம், கடல் பேரிடர் முன்னெச்சரிக்கை, கடல் சார் பொருளாதாரம், தொழில் நுட்பம் மற்றும் திறன் கட்டுமானம் ஆகியவை குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன.

கடல் தீவின் தொடரவல்ல வளர்ச்சி முன்னெடுப்பு இக்கருத்தரங்கில் வெளியிடப்பட்டது. பசிபிக், கரீப்பியன் மற்றும் இந்து மாக்கடல் பகுதிகளிலுள்ள 10க்கும் மேற்பட்ட தீவு நாடுகள், தொடர்புடைய சர்வதேச அமைப்புகள், சீன மற்றும் வெளிநாட்டு கடல் நிர்வாகத் துறைகள், அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த 180 விருந்தினர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.