5ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி நிறைவு
2022-11-10 18:59:47

5ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி நவம்பர் 10ஆம் நாள் நிறைவடைந்தது. திட்டமிட்ட இலக்குகளை நிறைவேற்றியுள்ள இப்பொருட்காட்சியில் உருவாக்கப்பட்ட விருப்பமான ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ஓராண்டின் அடிப்படையில் கணக்கிட்டால், 7352 கோடி அமெரிக்க டாலரை எட்டி, கடந்த முறையை விட 3.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இப்பொருட்காட்சியில் முதன்முறையாக காட்சிக்கு வைக்கப்பட்ட புதிய தயாரிப்புகள், தொழில் நுட்பங்கள் மற்றும் சேவைகள் கடந்த ஆண்டில் இருந்ததை விட அதிகமாகும். அத்துடன், புதிதாக உருவாக்கப்பட்ட எண்ணியல் காட்சியரங்குகளில் 69 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் கண்காட்சிகள் 5 கோடியே 90 லட்சம் பார்வைகளை ஈர்த்து, முன்பை விட அதிகரித்துள்ளது.

தற்போது, 6ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் தொழில் நிறுவனக் கண்காட்சிக்கான விண்ணப்பங்களை ஊக்குவிக்கும் பணி பன்முகங்களிலும் துவங்கியுள்ளது.