தூய்மை எரியாற்றல் தொழில் நுட்பத்தின் பெரும் வளர்ச்சி
2022-11-10 17:06:36

சர்வதேச எரியாற்றல் பணியகத்தின் செயல் இயக்குநர் ஃபாத்திஹ் பிரோல் நவம்பர் 10ஆம் நாள் கூறுகையில், தற்போது, சிக்கலான எரியாற்றல் நெருக்கடியை உலகம் எதிர்நோக்குகிறது. ஆனால், தூய்மை எரியாற்றல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் பயன்பாடு, உலகில் கார்பன் வெளியேற்றத்தின் அதிகரிப்பு அளவைக் குறைத்துள்ளது என்றார்.

மேலும், இவ்வாண்டு, மின்சார வாகனத் தொழில் துறை உயர்வேக வளர்ச்சியடைந்து வருகிறது. உலகிலுள்ள 50 விழுக்காட்டுக்கும் மேலான மின்சார வாகனங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கவல்ல எரியாற்றல் துறையில் சீனா முக்கிய பங்காற்றியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.