ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகளுக்கு சீனாவின் புதிய சலுகை
2022-11-10 16:44:14

திறப்பான உலகப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதம், வளர்ச்சி குன்றிய 10 நாடுகளிலிருந்து வரி வசூலிக்கத்தக்க 98 விழுக்காடு பொருட்களுக்கு வரி இல்லா சலுகையை சீனா வழங்க உள்ளது.

சீன அரசவையின் சுங்கவரி ஆணையம் அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, டிசம்பர் மாதம் தொடங்கி, ஆப்கானிஸ்தான், பெனின், புர்கினா பாசோ, கினியா-பிசாவ், தான்சானியா, உகண்டா, சாம்பியா உள்ளிட்ட 10 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 98 விழுக்காடு பொருட்களின் மீதான அனைத்து சுங்கவரியையும் சீனா தள்ளுபடி செய்யும்.

கூட்டு வெற்றியுடன் கூடிய திறப்பை நனவாக்குவது, திறப்பான உலகப் பொருளாதாரத்தை உருவாக்குவது, வளர்ச்சியை விரைவுபடுத்த வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு உதவியளிப்பது ஆகியவற்றுக்கு இது துணைபுரியும். மேலும், சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவியுள்ள அனைத்து வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கும் இச்சலுகை கொள்கை படிப்படியாக வழங்கப்படும் என்று இந்த ஆணையம் தெரிவித்துள்ளது.