மாலதீவில் தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
2022-11-10 17:11:21

மாலதீவின் தலைநகர் மாலேயில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களின் வசிப்பிடம் ஒன்று நவம்பர் 10ஆம் நாள் தீ விபத்துக்குள்ளானது. தற்போதுவரை இவ்விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர், 9 பேர் காணாமல் போயினர் என்று தெரியவந்துள்ளது.

மாலதீவு தேசிய படையின் தீயணைப்பு மற்றும் மீட்புதவி சேவை வாரியம் வெளியிட்ட தகவலின்படி, 28 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 9 பேர் தொடர்பு இழந்த நிலையில் உள்ளனர். மேலும், அந்நாட்டின் உள்ளூர் ஊடகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியா, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் முக்கியமாக இக்கட்டிடத்தில் வசிக்கின்றனர்.