2023 ஜெர்மனிப் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்திக்க கூடும்
2022-11-10 15:22:42

எரிசக்தி விலை உயர்வு மற்றும் பணவீக்கத்தின் பாதிப்பால் ஜெர்மனி குடும்பங்கள் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சுமையை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தாண்டு ஜெர்மனியின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 0.2 விழுக்காடு குறையக் கூடும் என்றும், அடுத்தாண்டின் பணவீக்க விகிதம் 7.4 விழுக்காடாக இருக்கும் என்றும் ஜெர்மனிப் பொருளாதார நிபுணர்கள் குழு 9ஆம் நாள் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இயற்கை எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டால், ஜெர்மனி கடும் வீழ்ச்சியைச் சந்திக்கக் கூடும். மேலும் உயர்ந்த பணவீக்கம் கூட ஏற்படக் கூடும். புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் மாதத்தில் ஜெர்மனியின் பணவீக்கம் 10.4விழுக்காட்டை எட்டி 1950ஆண்டுகளுக்குப் பின் இல்லாத உச்ச பதிவை உருவாக்கியது.