“இணையவழி சுற்றுலா” படப் போட்டி விதிகள்
2022-11-10 19:06:44

சீன ஊடகக் குழுமத்தின் ஆசிய-ஆப்பிரிக்க மொழிகள் சேவை மையத்தைச் சேர்ந்த தமிழ்ப்பிரிவு உலகளவில் புதிய ஊடகப் பயனர்களிடத்தில் படம் எடிட்டிங் புத்தாக்கப் போட்டி நடத்தும். விரிவான ஏற்பாடுகள் பின்வருமாறு—

 

1. இணையவழியில் படங்கள் சேகரிப்பு தேதி

2022ஆம் ஆண்டு நவம்பர் 10 முதல் 30ஆம் நாள் வரை. டிசம்பர் திங்கள் துவக்கத்தில் பரிசு பெற்ற படைப்புகள் வெளியிடப்படும்.

2. படைப்புக்கான தேவைகள்:

8 பின்னணி படங்கள் வழங்கப்படுகின்றன. படைப்புக்காக அசல் படங்களைத் பதிவிறக்கம் செய்யுங்கள்:

(1)  சுயவிருப்பப்படி பின்னணி படத்தைத் தெரிவு செய்து, அதனுடன் Photoshop போன்ற மென்பொருட்களின் மூலம் உங்கள் தனிநபர் படத்தையும், நண்பர்கள் அல்லது செல்லப் பிராணிகளுடனான படத்தையும் இணைக்கலாம். தேவைக்கு ஏற்ப ஆக்கத்திறனை பயன்படுத்தலாம்.

(2)  படத்தை எடிட்டிங்கிற்கு எந்த மென்பொருளையும் பயன்படுத்தலாம். படத்தில் எழுத்துகளையும் சேர்க்கலாம்.

(3)  போட்டிக்கான படைப்புகள் சுயமானதாக இருக்க வேண்டும்.

(4)  ஒருவர் அதிகபட்சம் 3 படைப்புகளை அனுப்பலாம்

(5)  போட்டியாளரின் படைப்புகள் சீன மக்கள் குடியரசு மற்றும் அவர்களின் உள்நாட்டு சட்டவிதிகளை மீறக் கூடாது. 3ஆவது தரப்பின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதிக்கக் கூடாது. ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படின், பங்கேற்பாளரே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

3. படைப்புகளை வழங்கும் முறை:

(1) போட்டி பற்றிய விளக்கத்தின் கீழுள்ள பகுதியில் படைப்புகளைப் பதிவேற்றலாம்

(2) மின்னஞ்சல் மூலம் படைப்புகளை tourtochina2022@gmail.com முகவரிக்கு அனுப்பலாம்.

4. தேர்வு முறை:

(1) தேர்வுக் குழு பரிசு:தமிழ்ப்பிரிவின் தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படும். சிந்தனை, கலை, தொழில் நுட்பம், ஈர்ப்பாற்றல், ஆக்கத்திறன் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். தேர்வு செய்யப்படும் படைப்புகளில், ஐவருக்கு முதல் நிலை பரிசு, பத்துவருக்கு 2ஆவது பரிசு, 20 பேருக்கு 3ஆவது பரிசு வழங்கப்படும்.

(2) இணையத்தில் பிரபலமான பரிசு:முகநூலில் நிகழ்ச்சிக்கான பின்னூட்ட(கருத்து) பகுதியில் பதிவேற்றப்பட்ட படைப்புகளில் நவம்பர் 30ஆம் வரை அதிகமான “Like” பெறும் படைப்புக்கு வழங்கப்படும்.

5. பரிசு வெளியீடு மற்றும் வழங்கல்:

போட்டிக்கான படங்களை சேகரிக்கும் பணிக்குப் பிறகு பரிசு பெற்ற படைப்புகள் சரிபார்க்கப்பட்டு, தமிழ்ப்பிரிவின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்படும். முகநூல் வழியாகவோ மின்னஞ்சல் வழியாகவோ பரிசு பெற்றவருடன் தமிழ்ப்பிரிவு தொடர்பு கொள்ளும்.

பரிசுப் பொருட்கள் போட்டிக்குப் பிந்தைய 10 நாட்களுக்குள் தபால் உள்ளிட்ட வழிகளில் வழங்கப்படும். போட்டிக்குப் பின் 2 வாரங்களுக்குள் பரிசுக்குத் தேர்வு செய்யப்படுபவர், தமிழ்பிரிவுடன் சொந்த விவரங்களை உறுதி செய்யத் தவறினால் தானாகவே பரிசை கைவிடுவதாகக் கருதப்படும்

6. மற்றவை:

இப்போட்டி தொடர்பான நிகழ்ச்சிகளில் பரிசு பெற்ற படைப்புகள், படைப்பாளரின் பெயர்கள் மற்றும் இதர அவசிய தகவல்களை வெளியிடவும் கட்டணமின்றி பயன்படுத்தவும் போட்டியாளர் அனுமதி அளிக்க வேண்டும்.

இப்போட்டியின் விதிகள் தொடர்பான முழு உரிமை, சீன ஊடகக் குழுமத்தின் ஆசிய-ஆப்பிரிக்க மொழிகள் சேவை மையத்தைச் சேர்ந்த தமிழ்ப் பிரிவுக்கு உண்டு.


பின்னணி படங்கள்: