சீன-கம்போடிய தலைமை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
2022-11-10 10:07:51

சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் 9ஆம் நாள் புனோம் பென்னில் கம்போடியத் தலைமை அமைச்சர் ஹூன் சென்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது லீக்கெச்சியாங் கூறுகையில், பெரிய நாடுகள் என்றாலும், சிறிய நாடுகள் என்றாலும், அனைத்தையும் சமத்துவ முறையில் சீனா கருதுகிறது. கம்போடியா, நாட்டின்  நடைமுறை நிலைமைக்கு ஏற்ற பாதையில் வளர்வதற்குச் சீனா ஆதரவளிக்கும். மேலும் கம்போடியாவுடன் இணைந்து இரு நாட்டுறவின் தொடர்ச்சியான சீரான வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னேற்றி இரு நாட்டு மக்களுக்கு மேலும் நன்மைகளைப் படைக்கச் சீனா விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.

வர்த்தம், முதலீடு, வேளாண்மை, உள்கட்டமைப்பு வசதி, மக்கள் தொடர்பு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றம் முதலிய துறைகளில் சீனாவுடனான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தி இரு நாட்டுறவின் ஆழமான வளர்ச்சியை  முன்னெடுக்க விரும்புவதாக ஹூன் சென் கூறினார்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, வேளாண்மை, உள்கட்டமைப்பு வசதி, கல்வி, சீனப் பாரம்பரிய மருந்து உள்ளிட்ட 10க்கும் அதிகமான ஒத்துழைப்பு ஆவணங்களில் சீனாவும் கம்போடியாவும் கையொப்பமிட்டன.