சீனத் தலைமையமைச்சர் மற்றும் கம்போடிய மன்னரின் சந்திப்பு
2022-11-11 15:59:45

சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங், புனோம் பென்னில் உள்ள மன்னர் அரண்மனையில் கம்போடிய மன்னர் நோரோடோம் சிஹாமோனியைச் சந்தித்தார்.

நடைபெறவுள்ள கிழக்காசிய ஒத்துழைப்புக்கான தலைவர்களின் கூட்டத்தில் பல்வேறு நாடுகளுடன் இணைந்து, அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிகாத்து, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி, பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புவதாக லீ கெச்சியாங் தெரிவித்தார்.

ஒரே சீனா என்ற கோட்பாட்டில் கம்போடியா ஊன்றி நின்று வருகின்றது. கம்போடியா மற்றும் சீனாவுக்கும் இடையே மேலும் நெருங்கிய பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்துக்கு ஆதரவளிப்பதாக சிஹாமோனி தெரிவித்தார்.